Donnerstag, 11. Juni 2009

கருத்தடை மாத்திரை

யேர்மனியர்களின் கண்டுபிடிப்புகள் பல இருக்கின்றன. அதில் ஒன்று இங்கே.

Schering AG நிறுவனம் மட்டும் இதைக் கண்டு பிடிக்காமல் இருந்திருந்தால் பூமியில் மானிட ஜன்மம் குந்தக் கூட இடமில்லாமல் இருந்திருக்கும். Anovlar என்ற கருத்தடை மாத்திரை 1961இல் சந்தைக்கு வந்தது

கறிவுர்ஸற்(Currywurst)

யேர்மனியர்களின் கண்டுபிடிப்புகள் பல இருக்கின்றன. அதில் ஒன்று இங்கே.

இந்தியக் கறிக்கலவையை மேற்கத்திய உணவுடன் கலந்து உண்ணக் கொடுத்த பெருமை Herta Heuwer யைச் சாரும். இந்த உணவை இவர் 1949இல் அறிமுகப் படுத்தினார்.

இன்று வருடம் ஒன்றுக்கு 800 மில்லியன் கறிவுர்ஸற் யேர்மனியில் விற்பனையாகிறது

சிப் கார்ட்

யேர்மனியர்களின் கண்டுபிடிப்புகள் பல இருக்கின்றன.
அதில் ஒன்று இங்கே.

சிப் கார்ட்டை Juergen Dethloff , Helmut Groettrup இருவரும் இணைந்து 1969இல் அறிமுகப்படுத்தினார்கள்.


காரிப்போ(HA-RI-BO)

யேர்மனியர்களின் கண்டுபிடிப்புகள் பல இருக்கின்றன.அதில் ஒன்று இங்கே.

சிறுவர்கள் முதல் பெரியர்கள் வரை விரும்பி உண்ணும் காரிப்போ என்ற இந்த இனிய இனிப்புப் பொருளை 1922இல் அறிமுகப்படுத்தியர் Hans Riegel .

கோப்பி வடிகட்டி (பில்ரர்)

யேர்மனியர்களின் கண்டுபிடிப்புகள் பல இருக்கின்றன.அதில் ஒன்று இங்கே.

கோப்பியை சரியாக வடிகட்டாவிட்டால் துகள்கள் வாய்க்குள் சென்று தொல்லைகள் தரும். Melitta Bentz 1908இல் கண்டு பிடித்துத் தந்த இந்த வடிகட்டி முறையால் தொல்லைகள் இன்றி கோப்பி அருந்த முடிகிறது.

ட்ராம்

யேர்மனியர்களின் கண்டுபிடிப்புகள் பல இருக்கின்றன.
அதில் ஒன்று இங்கே.

வீதிகளிலும் இரயிலை ஓட விட்டுப் பார்த்தவர் Werner von Siemens.
1881இல் மின்சாரத்தில் ஓடும் இவ்வண்டியை அறிமுகப் படுத்தி போக்குவரத்தை மிக எளிதாக்கியவர் இவர்

தேயிலை வடிகட்டி

யேர்மனியரின் கண்டுபிடிப்புகள் பல அதில் ஒன்று இங்கே.

தேயிலையை சுலபமாக வடிகட்டிக் கொள்ள மட்டுமல்ல அளவாக எடுத்துக் கொள்ளவும், பொறியியலாளரான Adolf Rambold 1922இல் இந்த வழியை அறிமுகப் படுத்தினார்