Donnerstag, 11. Juni 2009

கருத்தடை மாத்திரை

யேர்மனியர்களின் கண்டுபிடிப்புகள் பல இருக்கின்றன. அதில் ஒன்று இங்கே.

Schering AG நிறுவனம் மட்டும் இதைக் கண்டு பிடிக்காமல் இருந்திருந்தால் பூமியில் மானிட ஜன்மம் குந்தக் கூட இடமில்லாமல் இருந்திருக்கும். Anovlar என்ற கருத்தடை மாத்திரை 1961இல் சந்தைக்கு வந்தது

கறிவுர்ஸற்(Currywurst)

யேர்மனியர்களின் கண்டுபிடிப்புகள் பல இருக்கின்றன. அதில் ஒன்று இங்கே.

இந்தியக் கறிக்கலவையை மேற்கத்திய உணவுடன் கலந்து உண்ணக் கொடுத்த பெருமை Herta Heuwer யைச் சாரும். இந்த உணவை இவர் 1949இல் அறிமுகப் படுத்தினார்.

இன்று வருடம் ஒன்றுக்கு 800 மில்லியன் கறிவுர்ஸற் யேர்மனியில் விற்பனையாகிறது

சிப் கார்ட்

யேர்மனியர்களின் கண்டுபிடிப்புகள் பல இருக்கின்றன.
அதில் ஒன்று இங்கே.

சிப் கார்ட்டை Juergen Dethloff , Helmut Groettrup இருவரும் இணைந்து 1969இல் அறிமுகப்படுத்தினார்கள்.

காரிப்போ(HA-RI-BO)

யேர்மனியர்களின் கண்டுபிடிப்புகள் பல இருக்கின்றன.அதில் ஒன்று இங்கே.

சிறுவர்கள் முதல் பெரியர்கள் வரை விரும்பி உண்ணும் காரிப்போ என்ற இந்த இனிய இனிப்புப் பொருளை 1922இல் அறிமுகப்படுத்தியர் Hans Riegel .

கோப்பி வடிகட்டி (பில்ரர்)

யேர்மனியர்களின் கண்டுபிடிப்புகள் பல இருக்கின்றன.அதில் ஒன்று இங்கே.

கோப்பியை சரியாக வடிகட்டாவிட்டால் துகள்கள் வாய்க்குள் சென்று தொல்லைகள் தரும். Melitta Bentz 1908இல் கண்டு பிடித்துத் தந்த இந்த வடிகட்டி முறையால் தொல்லைகள் இன்றி கோப்பி அருந்த முடிகிறது.

ட்ராம்

யேர்மனியர்களின் கண்டுபிடிப்புகள் பல இருக்கின்றன.
அதில் ஒன்று இங்கே.

வீதிகளிலும் இரயிலை ஓட விட்டுப் பார்த்தவர் Werner von Siemens.
1881இல் மின்சாரத்தில் ஓடும் இவ்வண்டியை அறிமுகப் படுத்தி போக்குவரத்தை மிக எளிதாக்கியவர் இவர்

தேயிலை வடிகட்டி

யேர்மனியரின் கண்டுபிடிப்புகள் பல அதில் ஒன்று இங்கே.

தேயிலையை சுலபமாக வடிகட்டிக் கொள்ள மட்டுமல்ல அளவாக எடுத்துக் கொள்ளவும், பொறியியலாளரான Adolf Rambold 1922இல் இந்த வழியை அறிமுகப் படுத்தினார்

Sonntag, 15. Februar 2009

கணிணி

யேர்மனியர்களின் கண்டுபிடிப்புகள் பல இருக்கின்றன.
அதில் ஒன்று இங்கே.

கணிணிதான் எல்லாமே என்றாகி விட்டது இன்று. 1941இல் அறிமுகப்படுத்தியவர் Konrad Zuse.

தொலைக்காட்சி

யேர்மனியர்களின் கண்டுபிடிப்புகள் பல இருக்கின்றன.
அதில் ஒன்று இங்கே.

தொல்லைக் காட்சிகளாக மாறிவிட்ட இன்றைய தொலைக்காட்சியை 1930இல் கண்டுபிடித்தவர் Manfred von Ardenne.

ஜீன்ஸ்

யேர்மனியர்களின் கண்டுபிடிப்புகள் பல இருக்கின்றன.
அதில் ஒன்று இங்கே.

ஜீன்ஸ் எவ்வளவு வசதியாக இருக்கிறது. அவசரத்துக்கு துவைக்கக் கூடத் தேவை இல்லை, அப்படியே மாட்டிக் கொள்ளலாம்.

1873இல் இதை அறிமுகப் படுத்தியவர் Levi Strauss . இவர் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த ஒரு யேர்மனியர்.

தேர்மஸ் பிளாஸ்க்

யேர்மனியர்களின் கண்டுபிடிப்புகள் பல இருக்கின்றன.
அதில் ஒன்று இங்கே.

சூடு ஆறாமல் கோப்பி, தேனீர் குடிக்கணும். ஆனால் எப்பொழுதும் சாத்தியமாகுமா?

1903இல் தேர்மஸ் பிளாஸ்க்கை கண்டுபிடித்தவர் Reinhold Burger .

மவுத் ஓர்கன்

யேர்மனியர்களின் கண்டுபிடிப்புகள் பல இருக்கின்றன.

அதில் ஒன்று இங்கே.

அசைத்து அசைத்து வாயினால் இசைக்க ஒரு கருவி.

மவுத் ஓர்கனை 1821இல் கண்டுபிடித்து Christian Buschmann இசைக்க ஆரம்பித்தார்.

இன்னமும் கேட்க இனிமையாகவே இருக்கிறது.

ஸ்பார்க்பிளக்

யேர்மனியர்களின் கண்டு பிடிப்புகள் பல இருக்கின்றன.

அதில் ஒன்று இங்கே.

மோட்டாரை இயங்க வைக்க ஸ்பார்க்பிளக் அறிமுகமானது.

1902 இல் Robert Bosch ஸ்பார்க்பிளக்கை கண்டுபிடித்து மோட்டார் இயங்க காரணமானார்

பற்பசை

யேர்மனியர்களின் கண்டு பிடிப்புகள் பல இருக்கின்றன.
அதில் ஒன்று இங்கே.

பல்லை கூச்சமின்றி வெளியே காட்ட இது எவ்வளவு உதவி இருக்கிறது.

பல்லை அழகாக வைத்திருக்க, சுத்தமாக துப்பரவாக்க 1907இல் Ottomar Heinsius கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகப் படுத்தியது பற்பசை.

மின்குமிழ்

யேர்மனியர்களின் கண்டு பிடிப்புகள் பல இருக்கின்றன.

அதில் ஒன்று இங்கே.

விளக்கு வைத்த நேரத்திலே வந்தானய்யா. 1854இல் Heinrich Goebel மின்குமிழை கண்டுபிடித்து உலகுக்கு ஒளிபாச்சினார்.

உதைபந்தாட்ட காலணி

யேர்மனியர்களின் கண்டு பிடிப்புகள் பல இருக்கின்றன.
அதில் ஒன்று இங்கே.

வெற்றிகரமாக உதைப்பதற்கு இப்படியான கண்டுபிடிப்பு.

உதைபந்தாட்ட விளையாட்டில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த ஆணிகள் பொருத்திய காலணி.1953இல் Adolf Dassler இதை அறிமுகப் படுத்தினார். 1954இல் யேர்மனிய நாடு உதைப்பந்தாட்டத்தில் உலகச் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

பியர்

யேர்மனியர்களின் கண்டு பிடிப்புகள் பல இருக்கின்றன.
அதில் ஒன்று இங்கே.

போதையில் இருக்க, 1516ம் ஆண்டு Herzog Wilhelm IV கண்டுபிடித்த மதுபானம் பியர்.

இன்றும் வெற்றிகரமாக போதை ஏற்றிக் கொண்டிருக்கிறது.

அஸ்பிரின்

யேர்மனியர்களின் கண்டு பிடிப்புகள் பல இருக்கின்றன.
அதில் ஒன்று இங்கே.

வலிகளில் இருந்து விடுதலை. 1897ம் ஆண்டு Felix Hoffmann கண்டுபிடித்த அஸ்பிரின் குளிகை. இன்றும் வெற்றிகரமாக வலிகளைத் தீர்த்து வைக்கிறது.
இன்னும் வரும்